உலகின் விலை குறைந்த ஆன்ட்ராய்டு செல்போனை நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறி புக்கிங் செய்தது.
ஆன்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட Freedom 251 செல்போன் 4-இன்ச் qHD IPS display மற்றும் 3.2MP பின்புற கேமரா, 0.3MP முன்புற கேமராவுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
Freedom 251 செல்போனின் விளம்பரங்கள் நாடு முழுவதும் பெரிதும் கவனம் பெற்றதுடன் ஒரேநாளில் 30,000 பேர் செல்போனுக்கு பணம் செலுத்தி பதிவு செய்தனர். மொத்தம் 7 கோடி பேர் Freedom 251 செல்போன்களுக்கு பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. முன்பதிவு நடைபெற்ற நாட்களில் அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.
இதனிடையே, பல்வேறு பிரச்னைகளால் பணம் செலுத்தியோருக்கு பணத்தை Freedom 251 திரும்ப அளித்தது. ரூ.2,400 மதிப்பிலான ஆன்ட்ராய்டு செல்போனை ரூ.251-க்கு வழங்குவதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி, ஜூன் மாதம் முதல்கட்ட விற்பனை தொடங்கும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இயக்குநர் மொயித் கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் 28ம் தேதி முதல் cash on delivery முறையில் பதிவு செய்தவர்களுக்கு செல்போன்களை வினியோகம் செய்ய உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பதிவு செய்துள்ள 7 கோடி பேரில் பதிவு அடிப்படையில் 25 லட்சம் பேர்களுக்கு முதல்கட்டமாக செல்போன்கள் ஷிப்பிங் செய்யப்பட்டு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி: விகடன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.