.

Pages

Sunday, June 12, 2016

துபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆளில்லா விமானம்!

துபாய், ஜூன் 12
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக துபாய் விமான நிலைய வான் எல்லை அவசரமாக மூடப்பட்டது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியில் நேற்று காலை திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தால், அந்தப் பகுதி வான் எல்லை அவசரமாக மூடப்பட்டது.

காலை 11.36 மணியில் இருந்து 12.45 மணிவரை ( 69 நிமிடங்கள் ) அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லவோ, தரையிறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் 22 விமானங்கள் துபாய் சென்ட்ரல் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக துபாய் விமான நிலைய தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது சட்டபுறம்பான செயல் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
* File Image
Source: Emirates 247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.