தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வளவன்புரத்தில் தென்னை வணிக வளாகத்தில் விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதலை தொடங்கி வைத்து தென்னை விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
கொப்பரை கொள்முதல் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தென்னை விவசாயிகள் வாழ்வில் வளம் பெற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்திரவின்படி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், பட்டுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடி கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிகம் நடைபெறும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொள்முதல் நிலையங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொள்முதல் நடைபெறும். இப்பகுதி தென்னை விவசாய பெருமக்கள் பயன்படுத்தி வளம் பெறலாம். சாதாரண அறவை கொப்பரைக்கு ரூ.59.50 காசுகளும், பந்து கொப்பரைக்கு ரூ.62.40 காசுகளும், வழங்கப்படுகின்றது. தனியார் கொள்முதல் செய்வதை விட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அதிக விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். ஆகவே அனைத்து தென்னை விவசாய பெருமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.சி.வி.சேகர் (பட்டுக் கோட்டை), திரு.எம்.கோவிந்தராஜன் (பேராவூரணி), பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் திரு.சரோஜா மலையய்யன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் திரு.குழ.சுந்தரராசன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு.சுப்ரமணியன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் திரு.சி.சுப்ரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.குருசேவ், பட்டுக்கோட்டை நகர் மன்ற துணைத் தலைவர் திரு.வி.கே.டி.பாரதி, பட்டுக்கோட்டை சரக துணை பதிவாளர் திரு.வே.நாராயணன், இணை இயக்குநர் (வேளாண்மை)(பொ) திரு.ஆர். சீனிவாசன், துணை இயக்குநர்கள் திரு. உதயகுமார் (வேளாண்மை விற்பனை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு.சொக்கலிங்கம், வேளாண்மை வணிகம் அலுவலர் திரு.எஸ்.மாலதி, டான்பெட் மண்டல மேலாளர் திரு.முருகானந்தம் (மன்னார்குடி), உதவி செயற்பொறியாளர் திரு.கண்ணன் மற்றும் கூட்டுறவு அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள், ஏராளமான விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.