.

Pages

Monday, June 27, 2016

அதிரை பேரூர் 14 வது வார்டு பகுதியில் தன்னிறைவு திட்டத்தில் ரூ 5.22 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி !

அதிராம்பட்டினம், ஜூன் 27
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 14 வது வார்டு வெற்றிலைகாரத்தெரு பகுதியில் தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தின் கீழ் சுமார் 120 மீட்டர் நீளத்தில் ரூ 5.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வல கொடையாளர் மூன்றில் ஒரு பங்கு வழங்கிய ரூ 1.74 லட்சம் நிதி உதவியுடன் கடந்த 4 தினங்களாக இதன் பணிகள் நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிரை பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது ஷெரீப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சரி அதென்ன தன்னிறைவுத் திட்டம் ?
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை அவர்களின் பங்களிப்புடன் பூர்த்தி செய்துகொள்வதற்கான தன்னிறைவு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டு தொகையில் மூன்றில் ஒருபகுதியை பொதுமக்கள் பங்குத் தொகையாக செலுத்தவேண்டும். இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர், கழிப்பறைகள், நூலகம், கம்ப்யூட்டர் உபகரணங்கள், ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். இதுபோன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதி செய்தல், தெருவிளக்குகள் அமைத்தல், பூங்கா அமைத்தல், மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரித்தல், சிறுபாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.