.

Pages

Wednesday, June 8, 2016

SSLC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில உதவித்திட்டம் !

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் பிவ. மிபிவ- சீம மாணவ. மாணவியரை தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி பயில்வதற்கான உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும்  பிற்படுத்தப்பட்ட -– சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்கள். 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட- சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள்.  2 மாணவியர் ஆக மொத்தம் 10  மாணவ. மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் சேர்ந்து  மேல்நிலைக் கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ்  உதவி பெற விரும்பும் மாணவ.  மாணவியாpன் பெற்றேhரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்,  இத்திட்டத்தின் கீழ். ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டொன்டிற்கு ரூ28000-க்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு ரூ 56000-/ நிதியுதவி வழங்கப்படுகிறது.

நிதியுதவி விபரம் பின்வருமாறு:
கல்விக் கட்டணம் ரூ 8000-/
பராமாரிப்புக் கட்டணம் ரூ 3650-/
விடுதிக் கட்டணம் ரூ 15000-/
(விடுதியில் சேர்ந்த படிப்பவர்களுக்கு மட்டும்)
சிறப்பு பயிற்சிக் கட்டணம் ரூ 1500-/
மொத்தம் ரூ 28150-/ (அ) ரூ 28000-/ (ஓராண்டிற்கு)

தகுதியுடைய மாணவ - மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.