.

Pages

Friday, June 10, 2016

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு பேரணி ! [ படங்கள் ]

தஞ்சாவூர் மாவட்டம், தொழிலாளர் நலத்துறை சார்பாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு பேரணியினை புகைவண்டி நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

வருகின்ற 12.06.2016 அன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.  குழந்தை தொழிலாளர் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்கள்.

மேலும், தஞ்சாவூர் மாவட்ட சைல்டு லைன் அமைப்பினர் மத்திய அரசின் மாண்புமிகு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அவர்களுக்கு தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாகும் உறுதிமொழி அடங்கிய தபாலிலும், முதல் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.  அலுவலர்கள், பொது மக்கள், பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று ஐந்தாயிரம் தபால்கள் அனுப்பி வைக்க உள்ளனர்.

பேரணியானது தஞ்சாவூர் புகை வண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, கீழராஜ வீதி வழியாக அரசினர் மேனிலைப்பள்ளியில் சென்றடைந்தது.

பேரணியில் சுமார் 500 மாணவ மாணவியர்கள் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி முடிவில் குழந்தை தொழிலாளர் அகற்றுதல் தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் காலை 11.00 மணியளவில் குழந்தை தொழிலாளர் அகற்றுவது தொடர்பான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆய்வாளர் திரு.ப.பாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.திருவளர்செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.கஸ்தூரி, தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.