.

Pages

Tuesday, June 14, 2016

மோடி - ஜெயலலிதா சந்திப்பு: 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு !

டெல்லியில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா.  இந்த சந்திப்பின் போது,  தமிழகத்தின் 29 அம்ச கோரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும், பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,  நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும், மாநில அரசு பரிந்துரை இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும், மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும், 21 ம் மீனவர்களையும் 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  ஜிஎஸ்டி மசோதாவில் அதிமுக கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்க கூடாது, மருத்துவ நுழைவுத்தேர்வை அமலபடுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது.  மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்க எடுக்க வேண்டும், தமிழக கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் உள்ளன.
 

1 comment:

  1. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தக் கோரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.