.

Pages

Monday, June 20, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூன் 20
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 2016-2017 ஆம் கல்வியாண்டில் இளங்கலை அறிவியல் முதலாம் ஆண்டில் இணைந்த மாணவ, மாணவிகளுக்கான வரவேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. உதுமான் முகையதீன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்லூரி தோன்றிய வரலாறு, இளங்கலை பட்டபடிப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை கல்லூரியில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடப்பிரிவுகள், பல்கலைகழக அளவில் கல்லூரி நிகழ்த்திய சாதனைகள், மாணவ, மாணவிகளின் ஒழுக்கம், நேரந்தவறாமை, படிப்பில் கவனம் செலுத்துதல், பெற்றோருக்கான அறிவுரை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

விழாவில் கணினித்துறை தலைவர் என். ஜெயவீரன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான், வணிக ஆட்சியல் துறை தலைவர் முனைவர் ஹாஜா முகைதீன், வணிகவியல்துறை தலைவர் முனைவர் சிலார் முஹம்மது, ஆங்கிலத்துறை பொறுப்பு தலைவர் முனைவர் சிக்கந்தர் பாதுஷா, கணித துறை தலைவர் முனைவர்  சந்திரசேகரன், இயற்பியல் துறை தலைவர் ஆயிஷா மரியம், விலங்கியல் துறை தலைவர் முனைவர் குமாரசாமி, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், அரபிதுறை தலைவர் முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் முனைவர். மேஜர் பி.கணபதி தொகுத்து வழங்கி விழா முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 



1 comment:

  1. மாணவ மாணவிகளை மட்டும் உள்ளரங்கில் அமர வைத்துவிட்டு, அவர்களின் பெற்றோர்களை அரங்கிற்கு வெளியே வராண்டாவில் அமர வைப்பது கொடுமை!

    கல்லூரி தனக்குப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கொட்டாவைவிடக் கூடுதலாகவா மாணவர்களைச் சேர்க்கிறது? பெற்றோருக்கும் யார், என்ன பேசுகின்றார்கள் என்ற ஆர்வம் இருக்குமல்லவா? அரங்கு போதவில்லை என்றால், விரிவாக்குங்கள். இல்லாவிட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை இணைத்து நிகழ்ச்சி நடத்துவதைத் தவிருங்கள். பணம் செலுத்தியும் ஆவலுடனும் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர்களை மதியுங்கள்.

    பட்டமளிப்பின்போதும் பிரிவு பிரிவாக விழா நடத்துங்கள். பெற்றோர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் மகிழச் செய்யுங்கள். நான் சிலமுறை வந்து, 'எண்டா வந்தோம்?'என்ற ஏமாற்றத்தால் இதை எழுதுகின்றேன்.

    'அதிரை நியூஸ்' இதைக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லட்டும்!

    - அதிரை அஹ்மத்
    (முன்னாள் மாணவர்)
    cell: 98 94 98 92 30

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.