.

Pages

Thursday, June 23, 2016

தஞ்சையில் புத்தக திருவிழா - 2016

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக அரண்மனை விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2016 நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம், தமிழ் பல்கலைக் கழகம், தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கம் ( BAPASI ) தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் 15.07.2016 முதல் 25.07.2016 முடிய இரண்டாம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா 2016 நடைபெற உள்ளது.  இப்புத்தக திருவிழா நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.  இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது.

இப்புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.  இதில் பல்வேறு முதன்மையான பதிப்பாளர்களான வானதி பதிப்பகம், மாணிக்க வாசகம் பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் ஏனைய முன்னனி பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம், பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.  தஞ்சாவூர் புத்தக திருவிழாவின் சிறப்பாக 2016ம் ஆண்டு பதிப்பிலான 10 ஆயிரம் புதிய தலைப்புகளில் புதிய புத்தகங்கள் இடம் பெற உள்ளது. இதில் புத்தகங்கள் வாங்குவோருக்கு அதிகபட்சமாக 25 சதவிகிதமும் குறைந்தபட்சமாக 10 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். பள்ளி நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களுக்கு கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படும்.

மேலும், தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர் திரு.சுகிசிவம், திரு.கு.திருஞானசம்பந்தம், திரு. தா.கு.சுப்ரமணியன் மற்றும் திருமதி.பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் தினசரி சொற்பொழிவு ஆற்ற உள்ளனர்.  கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்திட தங்களது ஒத்துழைப்பினை நல்கிடவும், தங்களுக்கு தேவையான புத்தகங்களை சலுகை விலையில் வாங்கிடவும்,  இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் திரு.குணசேகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகர், மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வித்துறை) திருமதி.பியாட்ரிஸ் மார்கிரெட், தென்னக பண்பாட்டுத்துறை மேலாண்மை அலுவலர் திரு.ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.கேசவன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.ராம் மனோகர், சரஸ்வதி மகால் நூலக மேலாண்மை அலுவலர் திருமதி.ஏ பூங்கோதை, தென்னக புத்தக பதிப்பாளர் இணைச் செயலர் திரு.முருகன், துணைத் தலைவர் திரு.மயில்வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.