.

Pages

Monday, June 13, 2016

பட்டுக்கோட்டை - பேராவூரணி - ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தென்னை விவசாயிகளிடமிருந்து  கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தென்னை விவசாயிகள் நலன் காக்கும் வகையில் கொப்பரைத் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாவட்டவங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 02.06.2016 அறிவிப்பின்படி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையமானது, பட்டுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூடடுறவு விற்பனை சங்கம் மூலம் நேரடி கொப்பரை கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை (வணிகம்), கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் கொப்பரைத் தேங்காய் நேரடி கொள்முதல் நிலையம் தொடங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதன்படி கொப்பரை கொள்முதல் நிலையம் தென்னை வணிக வளாகம், வளவன்புரம், வெண்டாக்கோட்டை ரோடு பட்டுக்கோட்டையிலும், வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களும் பேராவூரணி பகுதியில் வேளாண் வணிக மையம், மெயின் ரோடு பள்ளத்தூரிலும், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் ஒரத்தநாடு பகுதியில் ஒரத்தநாடு சி.எம்.எஸ். வளாகத்தில், வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களும் கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்படும். கொள்முதல் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.  எனவே தென்னை பயிரிடும் விவசாயிகள் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை அலுவலர்களை அணுகி உரிய அடையாள அட்டை பெற்று தங்களிடம் உள்ள கொப்பரைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் கொள்முதல் நிலையங்களில் விவரங்கள் பெற ஒரத்தநாடு -04372-233231, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி 04373-235045 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ. சந்திரசேகர், கும்பகோணம் சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு.டி.எஸ்.ராஜசேகர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், இணை பதிவாளர் திரு.ச.சுப்ரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) சி.சீனிவாசன், துணை இயக்குநர் திரு.எஸ்.உதயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு.சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.