.

Pages

Monday, June 27, 2016

ஷார்ஜாவில் ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் அறிமுகம் !

துபாய்:  ‘குப்பையும் கோபுரம்’ ஆகும் என்பார்கள் தற்போது குப்பை தொட்டியையும் மக்களுக்கு உதவும்  கோபுரமாக்க  முடியும் என சார்ஜாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒரு பகுதியான  சார்ஜா மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியை பீயா என்னும் அரசு சார்பு நிறுவனம் செய்து வருகிறது. குப்பைகளை அகற்றுவதில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக  முதல் முறையாக ஷார்ஜாவில்  ஸ்மார்ட் குப்பை தொட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் குப்பை தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலம் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும்  வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வைபை எனும் இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் இலவசமாக வைபை வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.  மேலும் இந்த தொட்டியில் குப்பைகள் நிறைந்தவுடன் தானியங்கி கருவி மூலம் பீயா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிடும். இதன் மூலம் குப்பைகள் அகற்றும் பணி எளிதாகும். இது படிப்படியாக பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் குப்பை தொட்டிக்கள் சார்ஜா கடற்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை பீயா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர்  காலித் அல் ஹுரைமி தொடங்கி வைத்தார்.

நன்றி: தினகரன்
படங்கள்: எமிரேட்ஸ் 24/7
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.