.

Pages

Monday, June 20, 2016

உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத - வாய்பேச இயலாதோர் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற அழைப்பு !

18 வயது முதல் 45 வயதுடைய உடலியக்க குறைபாடுடையோர் மற்றும் காது கேளாத வாய்பேச இயலாதோர் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம். என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என். சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.
   
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தையற்பயிற்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதுடைய உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாதோர் ஆகியோர்களுக்கு 2015-16 ஆம் நிதியாண்டிற்கான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

இதுவரை இத்திட்டத்தின்கீழ் பயனடையாத தகுதியுள்ள பயனாளிகளிகள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற விருப்பமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், எண் 16 தரைத்தளம் 3வது ப்ளாக், தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர் (தொலைபேசி எண் 04362-236791) என்ற முகவரியில் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 மற்றும் தையற்பயிற்சி சான்றுகளுடன் 30-06-2016க்குள் விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.