கடந்த 2011ல் ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதில் பெண்களுக்கு ஒதுக்க வேண்டிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வார்டுகள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் தேர்வு பணியை முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி மொத்தம் 21 வார்டுகள் கொண்டு உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதில் 7 வார்டுகள் பெண்கள் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஜபுரன் ஜமீலா, உம்மல் மர்ஜான், ஷாஜஹான் பீவி, நிலோஃபர், ரபீக்கா, செளதா, சித்ரா உள்ளிட்ட 7 பெண்கள் வார்டு கவுன்சிலர்களாக பொறுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் பட்சத்தில், அதிரை பேரூர்மன்ற தேர்தலில் 10 அல்லது 11 வார்டுகளில் பெண்கள் போட்டியிடும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதில் சுழற்சி முறையில் தேர்வு நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதில் கடந்த முறை பெண் கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில் இம்முறை ஆண்கள் போட்டியிடும் வகையிலும், அதிக பெண் வாக்காளர்கள் பெற்றுள்ள வார்டுகளில் பெண்கள் போட்டியிடும் வகையில்
வரையறுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிரை பேரூர் மன்ற உள்ளாட்சி தேர்தல்களில் பேரூர்மன்ற தலைவர்களாக இரண்டு முறை ஆண்கள் பதவியில் இருந்துள்ளதால் இம்முறை சுழற்சி முறையில் தேர்வு நடைபெறும் எனவும், இதில் பேரூர்மன்ற தலைவர் பதவிக்கு பெண்கள் போட்டியிடும் வகையில் வரையறை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- அபூ அஜீம்
எது எப்படி இருக்குதோ இந்தமுரை
ReplyDeleteவெட்ரிபெரப் போவது அதிராம் பட்டினம் வரலாட்ரில் நிலத்தடி நீரை உயரசெய்த மன்னின் மய்ந்தன் அஸ்லாம் வெட்ரி பெருவார்
எது எப்படி இருக்குதோ இந்தமுரை
ReplyDeleteவெட்ரிபெரப் போவது அதிராம் பட்டினம் வரலாட்ரில் நிலத்தடி நீரை உயரசெய்த மன்னின் மய்ந்தன் அஸ்லாம் வெட்ரி பெருவார்
யாருக்கு வந்தது இந்த துனிச்சல்
ReplyDeleteஇவர் dmk அல்லது சுயேட்சையாக நின்ராலும் வெட்றிபெரும் மாமனிதர்
யாருக்கு வந்தது இந்த துனிச்சல்
ReplyDeleteஇவர் dmk அல்லது சுயேட்சையாக நின்ராலும் வெட்றிபெரும் மாமனிதர்
2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி எந்த வார்டில் பெண்கள் அதிகமோ அவ்வார்டிற்கு பெண் நிறுத்தப்படுகின்றன என தகவல் .
ReplyDelete