.

Pages

Saturday, June 18, 2016

ஊரை சுற்றி வரும் 5 ரூபாய் 'டீ' வியாபாரி!

அதிரையை சேர்ந்தவர் அஹமது பாதுஷா ( வயது 34 ). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது பகுதி நேர தொழிலாக தினமும் அதிரையின் பிராதன பகுதிகளில் சைக்கிளில் டீ கேனைக் கட்டிக்கொண்டு இஞ்சி டீ விற்பனை செய்து வருகிறார். காலையில் டீ வியாபாரம், மாலையில் உணவகத்தில் பணியாற்றுகிறார். அதிரையில் அனைத்து தரப்பினரின் நல்ல அபிமானத்தை பெற்றவர். நறுமணமும், சுவையும் மிக்க இவரது இஞ்சி 'டீ'யை பருக ஏராளமான வாடிக்கையாளர்கள் பருகி மகிழ்கின்றனர். 100 மில்லி கிராம் அளவு கொண்ட பேப்பர் கப்பில் வழங்கும் ஒரு டீ ரூ 5 க்கு விற்பனை செய்கிறார்.

இஞ்சி 'டீ' விற்பனை குறித்து அஹமது பாதுஷா நம்மிடம் கூறுகையில்,
அதிரையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தினமும் காலை நேரங்களில் இஞ்சி டீ விற்பனை செய்கிறேன். அதிக விற்பனை - குறைந்த லாபம் என்ற அடிப்படையில் எனது டீ வியாபாரம் கடந்த ஆண்டு துவங்கினேன். தினமும் 2 கேன்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட டீயை தயாரித்து விற்பனை செய்கிறேன். சுவையுடன் வழங்குவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் 'டீ' வியாபாரம் 2 மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். செலவு போக ரூ 500 கிடைக்கிறது' என்றார். மேலும் நல்ல வருமானம் ஈட்டும் இந்த பகுதி நேர டீ தொழிலை கிடைக்கும் நேரங்களில் கூச்சப்படமால் இளைஞர்கள் செய்ய முன்வர வேண்டும்' என்றார்.

ஆர்டரின் பேரில் திருமணம் மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக சுவையுடன் கூடிய இஞ்சி டீ யை தயாரித்து வழங்குகிறார்.
இவரது தொடர்புக்கு 9578242936
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.