.

Pages

Sunday, June 30, 2019

துபையிலிருந்து மங்களூரு வந்த விமானம் விபத்தில் சிக்கியது (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 30
இன்று (30.06.2019 ஞாயிறு) மாலை சுமார் 5.40 மணியளவில் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் விலகி விபத்திற்குள்ளானது.

இன்று துபையிலிருந்து 181 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு வந்து விபத்தில் சிக்கியது எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விமான ஓடுதளத்திலிருந்து விமான நிலையத்தில் டேக்ஸிவே எனப்படும் விமான நிறுத்தத்தை நோக்கி வந்தபோது விமானம் புல்தரை மண்ணிற்குள் சறுக்கிச் சென்று புதைந்ததால் தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கண்ணீர் நினைவலைகள்:
கடந்த 2010 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் இதேபோல் துபையிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 158 பயணிகள் உயிரிழந்தது இந்தியர்கள் மத்தியில் சோக அலையை எழுப்பியிருந்தது நினைவு கூறத்தக்கது.

Source: Indian Express
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
  
 
 
 
 
  
 
 

Saturday, June 29, 2019

மரண அறிவிப்பு ~ ஹாஜரா அம்மாள் (வயது 54)

அதிரை நியூஸ்: ஜூன் 29
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஆம்லாக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் என்.ஏ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மத்துல்லாஹ், ஹிதாயத்துல்லாஹ், சேக் மதீனா ஆகியோரின் சகோதரியும், பைசல் அஹ்மது, தவ்பீக் அகமது, ஹாபீஸ் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜரா அம்மாள் (வயது 54) அவர்கள் இன்று இரவு  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (30-06-2019) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்டம்: அடுத்தக்கட்டப் பணியை மேற்கொள்ள செயல் அலுவலரிடம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை வலியுறுத்தல்!

அதிராம்பட்டினம், ஜூன் 29
அதிராம்பட்டினம் பேரூராட்சி குடிநீர் தேவைக்காக, தொக்காலிக்காடு மகாராஜா சமூத்திர அணைக்கட்டு நீரோடையிலிருந்து வெளியேறும் உபரி நீரை பம்பிங் (இறைவை) மூலம் அதிராம்பட்டினம் பகுதி ஊரணிகளுக்கு நிரப்பிக்கொள்ளும் திட்டம் தொடர்பாக, எம்.கே.என் மதரஸாவுக்கு சொந்தமான நிலத்தில் பைப் மூலம் தண்ணீர் கொண்டுவருதற்கு அதன் நிர்வாகம் சார்பில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்டப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி, நீர் நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷிடம் வெள்ளிக்கிழமை மாலை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
 
 
 

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 29
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2019-2020 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா சாரா திருமண மஹாலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ். முகமது ரஃபி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், லயன்ஸ் சங்க அதிராம்பட்டினம் தலைவராக ஹாஜி எம்.அப்துல் ஜலீல், செயலாளராக சேக்கனா எம். நிஜாமுதீன், பொருளாளராக ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலராக ஹாஜி எம். நெய்னா முகமது மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.

விழாவில், லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட துணை ஆளுநர் செளமா. ராஜாரெத்தினம் பதவி பிரமாணம் செய்து வைத்து, சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில், ஆதரவற்ற பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம், ஆதரவற்ற 5 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் 50 கிலோ அரிசி, கஜா புயலில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 50 தென்னைக் கன்றுகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கே.ரமேஷ்குமார், வட்டாரத் தலைவர், ஆர்.தமிழரசன், ஆர்.சரவணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் இணைப்புரை வழங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.பி. கணபதி சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.

விழாவில், கஜா புயலில் கடும் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிவாரணப்பணி, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவைப்பணிகளை ஆற்றிய எம்.எஸ் குர்ஷீத் ஹுசைன், ஆர். ரமேஷ் குமார், ஏஸ்டாலின் பீட்டர் பாபு, ஏ.ஜெயபால், டாக்டர் ரொக்கையா சேக்முகமது, வ.விவேகானந்தம், ஆர்.மாரிமுத்து மற்றும் அதிரை பைத்துல்மால், அக்ரா சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் ஹாஜி எம்.அப்துல் ஜலீல் ஏற்புரை வழங்கினார். பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், விருந்தினர்கள் அறிமுகம் மற்றும் நிகழ்சிகளை தொகுத்தளித்தார். விழா முடிவில், செயலாளர் சேக்கனா எம். நிஜாமுதீன் நன்றி கூறினார். விழாவில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.