திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான முதல் பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில், இன்று சனிக்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 29ந் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே துறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) இன்று (ஜூன் 1) சனிக்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு பகல் மணிக்கு வந்து சேர்ந்தது.
ரயில் பயணிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ரயிலுக்கு, பயணிகள், பொதுமக்கள் கையசைத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சக பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
சிறப்பு துஆ (பிரார்த்தனை):
அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது நெய்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயணிகளின் ரயில் பயணம் பாதுகாப்பாக அமையவும், ரயில் போக்குவரத்து சேவையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட ரயில் ஆர்வலர்கள், இப்பணிக்காக பாடுபட்ட ரயில்வே உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் உட்பட ரயில் பயணிகள் அனைவரின் வாழ்வு சிறக்கவும், சிறப்பு துஆ ஓதி பிரார்த்தனை செய்தார். இதில், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் சிஹாப்தீன், செயலர் ஹாஜி ஏ அப்துல் ரெஜாக் மற்றும் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விறு விறுப்பாக விற்பனையான பயணச்சீட்டு:
முன்னதாக, அதிராம்பட்டினத்திலிருந்து ரயிலில் முதல் பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வத்துடன் பயணச்சீட்டுகளை பெற்றுச்சென்றனர். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. பொறுமையாக வரிசையில் நின்று பயணச்சீட்டை பெற்றனர்.
ரயில் வருகையை படம்பிடித்த செல்பி பிரியர்கள்:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் வருகைக்காக காத்திருந்த செல்பி பிரியர்கள் ரயில் அருகே சென்று தங்களது கேமிரா மூலம் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
பின்னர் அங்கிருந்து பகல் 11.32 மணிக்கு புறப்பட்டு, பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பிற்பகல் 14.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848) பிற்பகல் 14.30 மணிக்குப் புறப்படும் ரயில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 17.18 மணிக்கு வந்து சேரும், பின்னர் அங்கிருந்து மாலை 17.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 20.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும், இந்த பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூன் 1) தொடங்கி, வரும் ஆகஸ்ட் 30 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் சேவை தொடக்கம் குறித்து அதிராம்பட்டினம் ரயில் ஆர்வலர்கள் (இணைப்பில் வீடியோ)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.