தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. வாக்காளர்கள் பட்டியலில் மொத்தம் 25,472 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வார்டுகளிலும் சராசரியாக 796 வாக்காளர்கள் ஆகும்.
அதிராம்பட்டினம் வள்ளியம்மை நகர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உட்பட மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் இருந்தன.
இந்நிலையில், வார்டு மறுசீரமைக்குப் பிறகு, அதிராம்பட்டினம் பேரூராட்சியில்...
27 ஆக இருந்து வந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை தற்போது 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், 3, 4, 7, 8, 9, 10, 13, 14, 17, 19, 20 ஆகிய வார்டுகளில் பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக வாக்குச்சாவடிகளும், மீதமுள்ள 1, 2, 5, 6, 11, 12, 15, 16,18, 21 ஆகிய வார்டுகளில் ஆண், பெண் என அனைத்து வாக்காளருக்கான வாக்குச்சாவடிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வார்டுகள் மறுசீரமைக்குப் பின் புதிய வார்டு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...
அதன் படி,
1-வது வார்டு - மிலாரிக்காடு, வள்ளியம்மை நகர், அம்பேத்கர் நகர்
2-வது வார்டு - அம்பேத்கர் நகர், அதிரை நியூஸ்
3-வது வார்டு - மதுக்கூர் ரோடு, மண்ணப்பன்குளம், சால்ட் லேன், பிள்ளையார் கோவில் தெரு, தோப்புக்காடு
4-வது வார்டு - பிள்ளையார் கோவில் தெரு, ஹாஜியார் லேன், போலீஸ் லேன், சங்கத்துகொல்லை, வீரனார் கோவில் தெரு, அண்ணா தெரு, சுப்பிரமணியர் கோவில் தெரு, அதிரை நியூஸ்
5-வது வார்டு - புதுமனைத் தெரு, ஆலடித்தெரு
6-வது வார்டு - மேல நெயக்காரத் தெரு, சின்ன நெயக்காரத் தெரு, புதுமனைத்தெரு
7-வது வார்டு - மேலத்தெரு (மேல வடபுறம், கீழ வடபுறம்), மிலாரிக்காடு
8-வது வார்டு - மேலத்தெரு (மேல தென்புற கீழ்பக்கம், மேல தென்புற மேல்பக்கம்)
9-வது வார்டு - நடுத்தெரு மேல்புறம், காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு, கீழத்தெரு
10-வது வார்டு - நடுத்தெரு கீழ்புறம், நடுத்தெரு கடைசி சந்து, நேருஜி தெரு, நேதாஜி தெரு, வ.உ.சி தெரு, செக்கடித்தெரு, அதிரை நியூஸ்
11-வது வார்டு - புதுத்தெரு வடபுறம், ஆஸ்பத்திரி தெரு, ஆஸ்பத்திரி ரோடு, பெருமாள் கோவில் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு
12-வது வார்டு - சுப்ரமணியயர் கோவில் தெரு
13-வது வார்டு - சால்ட் லேன், சுப்ரமணியர் கோவில் தெரு, சேதுரோடு
14-வது வார்டு - புதுத்தெரு தென்புறம், முத்தம்மாள் தெரு, திலகர் தெரு
15-வது வார்டு - கீழத்தெரு, புதுக்கடைத்தெரு, மார்க்கெட், புதுநெயக்காரத்தெரு
16-வது வார்டு - ஹாஜா நகர்
17-வது வார்டு - ஆசாத் நகர், கடற்கரைத் தெரு, ஹாஜா நகர்
18-வது வார்டு - சேக் உதுமான் தெரு, கடற்கரைத்தெரு, ரயில்வே ஸ்டேசன் ரோடு
19-வது வார்டு - தைக்கால் தெரு, ஆறுமுகக்கிட்டங்கித்தெரு, காந்தி நகர், பாரதியார் தெரு
20-வது வார்டு - மாரியம்மன் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பெரியார் தெரு, சேதுரோடு, அதிரை நியூஸ்
21-வது வார்டு - மாரியம்மன் கோவில் தெரு
புதிதாக அமைக்கப்பட்ட ஒவ்வொரு வார்டுகளின் வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகள்:
வார்டு புதுபித்தலில் அதிரை நீயூஸையும் ஒரு வார்டாக அறிவித்த அதிரை பேரூராட்சிக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
ReplyDeleteஇப்படிக்கு
அப்படி ஒரு தெரு எங்க இருக்குன்னு தேடுபவர் சங்கம்��