அதிராம்பட்டினம், ஜூன் 24
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், மரக்காணம் ~ ராமேசுவரம் வரை சுமார் 600 கி.மீ நீள மனிதச் சங்கிலிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத் நிறுவனத் தலைவர் க.கா. இரா. லெனின், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க. சண்முக சுந்தரம், திமுக சார்பில் தஞ்சை மக்களவை தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ் பழனி மாணிக்கம், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாண சுந்தரம், ஒரத்தநாடு எம்.எல்.ஏ எம்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏனாதி. பாலசுப்பிரமணியன், கா. அண்ணாதுரை, மகேஷ் கிருஷ்ண சாமி, பேச்சாளர் ந. மணிமுத்து, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏ.எம் மார்க்ஸ், என்.காளிதாஸ், மதிமுக கோ.உதயகுமார், வடுகநாதன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை அகமது ஹாஜா, செய்யது முகமது புஹாரி, மனிதநேய ஜனநாயக கட்சி பைசல் அகமது, அப்துல் சமது, நாம் மனிதர் கட்சி தவ்பீக், சரபுதீன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், ஹைட்ரோ கார்பன், கெய்ல் குழாய் பதிப்பு, 8 வழிச்சாலை, விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்தல், அணு மின் நிலையங்கள், அணுக்கழிவுகள் கூடம் அமைத்தல், நியூட்ரினோ ஆய்வு உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.