.

Pages

Tuesday, June 18, 2019

அதிராம்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 18
சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள, அதிராம்பட்டினத்தில் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, அதிராம்பட்டினம் காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன் பங்கேற்று சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்தும், விபத்தில்லா பயணம் குறித்தும் பேசினார்.

இருசக்கர வாகனம் ஓட்டும்போது, தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும், வாகனத்தில் செல்லும்போது, செல்லிடப்பேசியை உபயோகிக்கக் கூடாது, சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும், மிதமான வேகத்தில் கட்டுப்பாடுடன் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட சாலை விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் போலீசார் பங்கேற்றனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.