.

Pages

Tuesday, June 25, 2019

அதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினத்தில் குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்ததில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்தவர் அபூபக்கர். இவரது வீட்டின் அருகே சாகுல் ஹமீது மனைவி ரஹ்மத் (38), ரஹ்மான் மனைவி அபுரோஸ் பேகம் (25) ஆகியோர் அடுத்தடுத்து குடிசை வீடுகளில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென குடிசையின் மேற்கூரையில் தீ பற்றியது, பின்னர், தீ மளமளவென பரவியதால் வீட்டில் இருந்த அரிசி மூடை, பீரோல், எரிவாயு சிலிண்டர், இடியாப்பம் சுடும் தளவாடப் பொருட்கள் உட்பட அனைத்தும் தீயில் கருகியது. இதனால், அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர், அப்பகுதியினர் திரண்டு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் சேத மதிப்பு ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.