.

Pages

Monday, June 24, 2019

தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும் விழிப்புணர்வு கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த விசாரணை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ஆண்ணாதுரை முன்னிலையில் இன்று (24.06.2019) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பம் செய்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்காக நடைபெற்ற விசாரணை கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப்குமார் தகவல் கோரி விண்ணப்பித்தவர்களை நேரில் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய தகவல்களை அளித்திட தொடர்புடைய அலுவலங்களை சேர்ந்த பொது தகவல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தகவல் பெறும்; உரிமை சட்டம் தொடர்பாக அரசு அலுவலங்களை சேர்ந்த பொது தகவல் அலுவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கூட்டம் மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ஆண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல் பெறும்; உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தும் முறை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் உட்பிரிவுகள், விண்ணப்பதாரருக்கு தகவல் அளிக்கப்பட வேண்டிய காலக்கெடு விதிமுறைகள், தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்ட பிரிவுகள் ஆகியவை குறித்து மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப்குமார் அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான அலுவலர்களின் சந்தேகங்களுக்கு மாநில தகவல் ஆணையர் ரா.பிரதாப்குமார் பதிலளித்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.