தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் வாட்டர் ஏ.டி.எம். எனும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (22.06.2019) தொடங்கி வைத்தார்.
பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 18 குரும்பகுளம் பகுதியில் சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தின் கீழ் வாட்டர் ஏ.டி.எம். எனும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டிற்க்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் உயர்தரம் வாய்ந்த குடிநீரை மிக குறைந்த விலையில் வழங்க தானியங்கி குடிநீர் மையங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பட்டுக்கோட்டை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பொது கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்று நீரை ஆதாராமாக கொண்டு தீவிர வடிகட்டுதல் மற்றும் எதிர் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் வண்ணம் சுத்திகரிக்கும் இயந்திரம் நிறுவ ஏற்படும் செலவின தொகை 23 இடங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ3.45 கோடியாகும். இத்திட்டத்தை நிறைவேற்ற மூலதன செலவினத்தை தனியார் தொழில் நிறுவனம், தொழில் முனைவோர்கள் மற்றும் இதர தொகையில் ஈடு செய்து கொள்ளவும், இயக்குதல், பராமரித்தல் செலவினத்தை பயனாளிகளிடமிருந்து பெறப்படும் கட்டணத்திலிருந்து ஈடு செய்து கொள்ளவும், மின் கட்டணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் செலுத்தவும் நகராட்சி மூலம் இடம் மற்றும் நீராதாரம் வழங்கிடும் வகையிலும் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 18 குரும்பகுளம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் இத்திட்டத்தின் மூலம் குரும்பகுளம் பகுதியை சேர்ந்த சுமார் 2000 நபர்கள் பயன்பெறுவர். இவ்வாறு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), திரு.மா.கோவிந்தராசு (பேராவூரணி), பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆ.ர்.காந்தி, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் இரா.கார்த்திகேயன், சுப.ராஜேந்திரன், முன்னாள் தென்னை வளர்ச்சி குழு உறுப்பினர் அ.மலைஅய்யன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.