.

Pages

Monday, June 24, 2019

காவல் துறையால் தாக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவருக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு!

அதிராம்பட்டினம், ஜூன் 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் இசட்.முகமது இலியாஸ் (வயது 32). எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 01-04-2013 அன்று மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்கமல், ரவிச்சந்திரன், முத்துலெட்சுமி ஆகியோர் அவதூறாக பேசி கடுமையாக தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக, அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என 26.07.2018 ல் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மனுதாரர் இசட்.முகமது இலியாஸ் இழப்பீடு தொகை ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையை அதிராம்பட்டினம் காவல் நிலைய எழுத்தர் பழனிவேலிடம் இருந்து நேற்று (ஜூன் 23) ஞாயிற்றுக்கிழமை பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.