.

Pages

Friday, June 7, 2019

உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ரயிலடியில் உலக உணவு பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட  ஆட்சித்  தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று ( 07.06.2019 ) கொடி அசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் இன்று உலக உணவு பாதுகாப்புத் தினம் கொண்டாடப்பட்டது.  தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு செயல் விளக்க கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார். 

பின்னர் கல்லூரி மாணவிகள், பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை கொடி அசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.  விழிப்புணர்வு பேரணி ரேயில் நிலையத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. 

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை  தெரிவித்ததாவது; 
ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் மாதம் 7-ஆம் நாள் உலக உணவு பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  அதையொட்டி பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகள் கிடைப்பதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு குறித்து அனைவருக்கும் உணர்த்துவதில் சமுதாயம் மற்றும் தேசத்தின் நிலையான வளர்ச்சியிலும் அனைவரின் பொறுப்பும், அரசாங்கம் மற்றும் வணிகர்களின் பங்கும் உள்ளது. 

பாதுகாப்பான உணவின் முக்கியத்துவத்தை உணரவு, பாதுகாப்பற்ற உணவு உண்ணக்கூடாது என்பதையும் உணர்ந்து சொந்த உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருப்பதுடன் தன் சுத்தம் மற்றும் தன்னைச் சுற்றி சுகாதாரமாக இருக்க உறுதி செய்வதுடன் உணவு கலப்படத்துக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று அனைவரும் உறுதியேற்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.