அதிராம்பட்டினம், ஜூன் 25
திருவாரூர் ~ காரைக்குடி ரயில் வழித்தடத்தில் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் ~ காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் டெமு ரயில் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை முதல் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் படி, 3 பெட்டிகளுடன் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்கு ரயில் புறப்படும்போது, காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 09.45 மணிக்கு ரயில் புறப்படும். இரண்டும், பட்டுக்கோட்டையில் சந்தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின்னர் மறுநாள், இதேபோல் திருவாரூர் மற்றும் காரைக்குடியிலிருந்து ரயில் சேவை நடைபெறும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காரைக்குடிக்கு மாலை 16.15 மணிக்கு செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) திருவாரூருக்கு மாலை 17.45 மணிக்கு சென்றடையும். இதன்மூலம் தினசரி ரயில் சேவையை, இரு மார்க்கத்திலும் பெற முடியும்.
இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.