.

Pages

Monday, June 10, 2019

இறகுப்பந்து போட்டியில் அதிரை அரசுப் பள்ளி மாணவன் சாதனை!

சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவன் அ.ஆத்திப் அகமது
அதிராம்பட்டினம், ஜூன் 10
மன்னார்குடி சாய்னா இறகுப் பந்து கழகத்தின் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான இறகுப்பந்துப் போட்டி மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவன் அ.ஆத்திப் அகமது, 10 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கும், அதிராம்பட்டினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ.அஜுமுதீன் மகன் ஆவார்.

சாதனை படைத்த மாணவன் அ.ஆத்திப் அகமதுவை, பள்ளித்தலைமை ஆசிரியை எஸ். மாலதி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.