அதிராம்பட்டினம், ஜூன் 22
தமிழகத்தில் கடந்த சில மாதமாக நிலவி வரும் கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வரும் நிலையில், பொதுமக்களின் துயர் துடைக்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகைகள், தண்ணீர் லாரிகள் மூலம் இலவச குடிநீர் விநியோகம் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
அதன்படி, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில், ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் கிராணி திடலில், மழை வேண்டி சிறப்பு தொழுகை சனிக்கிழமை காலை நடைபெற்றது.
தொழுகையை, அவ்வமைப்பின் மாநிலப் பேச்சாளர் மவ்லவி அசரப்தீன் பிர்தெளசி நடத்தினார். முன்னதாக, மழை தொழுகை குறித்து விளக்கத்தில் 'தொழுகையாளிகள் ஒவ்வொருவரும் தான் அணிந்திருக்கும் சட்டையை திருப்பி அணிந்துகொண்டு தொழும் படியும், மழை வேண்டி இறைவனிடம் இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொழுகையின்போது, தமிழகத்தில் நிகழும் தண்ணீர் பற்றாக்குறை நீங்க கோடை வெப்பத்தின் தாக்கம் குறைய மழை வேண்டியும், அனைத்து சமுதாய மக்களும் துயர் இன்றி ஒற்றுமையுடன் மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் எந்நாளும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக ஒவ்வொருவரும் தனித்தனியே பிரார்த்தனை செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.