.

Pages

Sunday, June 9, 2019

செந்தலையில் தீ விபத்து: 4 வீடுகள் நாசம் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு (படங்கள்)

பேராவூரணி ஜூன்.9-
பேராவூரணி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் தீயில் எரிந்து நாசம் ஆனது. வீட்டில் இருந்த நகை, பணம் என லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை செந்தலைவயல் மீனவர் கிராமமாகும். ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மணிக்கு அப்துல் ரகுமான் என்பவர் மகன் சாகுல்கமீது (28) என்பவரின் குடிசை வீட்டில் தீப்பற்றியது. கடல் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள அவரது சகோதரர் ராவுத்தர் (30) என்பவரின் ஓட்டு வீட்டிற்கு பரவியது. இதில் அவரது வீட்டில் இருந்த சிலிண்டர் தீப்பிடித்து பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அங்கிருந்து கிளம்பிய தீப்பொறி பட்டு, அவரது சகோதரர் கபூர் (26) என்பவரின் குடிசை வீடும், பக்கத்தில் உள்ள சிக்கந்தர் என்பவரின் குடிசை வீடும் தீப்பற்றியது. இதில் சிக்கந்தரின் வாய் பேச இயலாத மனைவி சாயிரா பேகத்தை அக்கம்பக்கத்தினர் காயமின்றி மீட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த இளைஞர்கள், ஜமாஅத்தார்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சி.கோவிந்தராஜன் மற்றும் வீரர்கள் ரஜினி, விக்னேஷ் ஆகியோர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத்தீவிபத்தில், 15 பவுன் நகை, ரொக்கப் பணம் ரூ 1 இலட்சத்து 8 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் மாணவர்களின் பாடப்புத்தகங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், உடைகள் ஆகியவையும் தீயில் கருகின. உடமைகளை பறிகொடுத்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி உத்தரவின் பேரில் அடைக்கத்தேவன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கிராம உதவியாளர்கள் பரஞ்சோதி, தங்கவேலு ஆகியோர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடுகளை இழந்த மக்கள் அருகில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.