.

Pages

Tuesday, October 14, 2014

பட்டுக்கோட்டையில் காவல்நிலைய டெலிபோன் டவரில் ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் ! [ படங்கள் இணைப்பு ]

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் (45). இவர் அறந்தாங்கி சாலையில் தேநீர் மற்றும் பழச்சாறு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மதுபானம் விற்கப்படுவதாகவும், அதனால் கருப்பையனுக்கு அடிக்கடி போலீஸ் தொந்தரவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கருப்பையன் மது போதையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்திலுள்ள 250 அடி உயர செல்டவரில் ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டார் (படம்). கையில் பெட்ரோல் பாட்டிலும், தீப்பெட்டியும் வைத்திருந்த அவர் தனது கடையை போலீஸார் சேதப்படுத்தியதாகவும், அதனால் டவரின் உச்சியில் இருந்து  கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

அங்கு கூட்டம் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் கருப்பையனை கீழே அழைத்து வர முயன்றனர். ஆனால், தன்னை மீட்க யாரும் மேலே வரக்கூடாது என்று கருப்பையன் கூச்சலிட்டார். அதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனிடையே, கருப்பையன் மனைவி, மகள், பண்ணைவயல் ஊராட்சித் தலைவர் சு. ராஜாத்தம்பி உள்பட பலர் கீழே இறங்கி வருமாறு மைக்கில் பேசினர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் 2 பேர் கோபுரத்தில் ஏறி மாலை 5 மணிக்கு கருப்பையனை பத்திரமாக இறக்கி கீழே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வரை கருப்பையன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

படங்கள் : சுஹைப்









3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சரியா சொன்னிங்க

    ReplyDelete
  3. இறப்பு தான் முடிவு என்றால் இவர் தைரியம் மற்றும் திரமை இல்லாதார் என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல் .தவறு நடப்பதை சமூகம் பார்த்து கொண்டு இருப்பது ,தவறிலும் தவறு .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.