இந்நிலையில், கருப்பையன் மது போதையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்திலுள்ள 250 அடி உயர செல்டவரில் ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டார் (படம்). கையில் பெட்ரோல் பாட்டிலும், தீப்பெட்டியும் வைத்திருந்த அவர் தனது கடையை போலீஸார் சேதப்படுத்தியதாகவும், அதனால் டவரின் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
அங்கு கூட்டம் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் கருப்பையனை கீழே அழைத்து வர முயன்றனர். ஆனால், தன்னை மீட்க யாரும் மேலே வரக்கூடாது என்று கருப்பையன் கூச்சலிட்டார். அதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே, கருப்பையன் மனைவி, மகள், பண்ணைவயல் ஊராட்சித் தலைவர் சு. ராஜாத்தம்பி உள்பட பலர் கீழே இறங்கி வருமாறு மைக்கில் பேசினர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் 2 பேர் கோபுரத்தில் ஏறி மாலை 5 மணிக்கு கருப்பையனை பத்திரமாக இறக்கி கீழே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வரை கருப்பையன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
படங்கள் : சுஹைப்










This comment has been removed by the author.
ReplyDeleteசரியா சொன்னிங்க
ReplyDeleteஇறப்பு தான் முடிவு என்றால் இவர் தைரியம் மற்றும் திரமை இல்லாதார் என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல் .தவறு நடப்பதை சமூகம் பார்த்து கொண்டு இருப்பது ,தவறிலும் தவறு .
ReplyDelete