இன்று காலை அதிரை கடலில் பிடிபட்ட புள்ளி திருக்கை மீன் கடைத்தெரு பெரிய மார்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. சுமார் 150 கிலோ எடை கொண்ட திருக்கை மீனை வாடிக்கையாளர்கள் வியப்புடன் பார்வையிட்டனர். இறுதியில் ரூ 7,500 க்கு விற்பனை ஆனது.
இதுகுறித்து அதிரை மீனவர் சொக்கன் நம்மிடம் கூறுகையில்...
'திருக்கை மீனில் கருந்திருக்கை, முன்டாங்க்கனி திருக்கை, முள்ளந் திருக்கை, ஆடா திருக்கை, குருவி திருக்கை, வலுவாடி திருக்கை, பால் திருக்கை, கொம்பு திருக்கை, பூவா திருக்கை என பலவகை இருக்கிறது. இதில் புள்ளி திருக்கை மீனை அதிரை பகுதி பொதுமக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். திருக்கை மீன் மருத்துவ குணம் வாய்ந்தது. முள் இல்லாதது. குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பத்திய உணவாக பயன்படுகிறது. மேலும் மீன் எண்ணை தயாரிக்கவும், இதன் செவில்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது' என்றார்.







அரிய திருக்கை மீன்! பங்கு வைத்து எங்களுக்கும் ஒரு பங்கு தாருங்களேனப்பா!
ReplyDelete