இந்நிலையில் தமாகா அதிரை பேரூர் சார்பில் அதிரை பேரூந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தெருமுனை பிராசாரக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமாகாவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடுவூர் கரிகாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதுவின் தீமை மற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா நடத்திவரும் கையெழுத்து இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியை தமாகா அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் முதல் நபராக மதுவிலக்கு கோரி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
கூட்டத்தில் தமாகா அதிரை பேரூர் நிர்வாகிகள் M.M.S நிஜார், M.M.S இக்பால், M.M.S. ரபி அஹமது, M.M.S ஜியாவுதீன், M.M.S ரியாஸ். புஹாரி, ரபிக் அஹமது, வீரப்பன், ராஜா, ராஜேந்திரன், ரத்தினம், குணசேகரன் மற்றும் ஏராளமான தமாகாவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.












During the isha prayer they disturbed
ReplyDeleteDuring the isha prayer they disturbed
ReplyDelete