.

Pages

Monday, September 7, 2015

அதிரை பேருந்து நிலையத்தில் தமாகாவினர் நடத்திய கையெழுத்து இயக்க தெருமுனை பிராசாரக்கூட்டம் !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெரும் கையெழுத்து இயக்கத்தில் சுமார் 1 கோடி பேரிடம் கையெழுத்துகளைப் பெற இருக்கின்றனர்.

இந்நிலையில் தமாகா அதிரை பேரூர் சார்பில் அதிரை பேரூந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தெருமுனை பிராசாரக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமாகாவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடுவூர் கரிகாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதுவின் தீமை மற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா நடத்திவரும் கையெழுத்து இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

முன்னதாக கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியை தமாகா அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் முதல் நபராக மதுவிலக்கு கோரி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

கூட்டத்தில் தமாகா அதிரை பேரூர் நிர்வாகிகள் M.M.S நிஜார், M.M.S இக்பால், M.M.S. ரபி அஹமது, M.M.S ஜியாவுதீன், M.M.S ரியாஸ். புஹாரி, ரபிக் அஹமது, வீரப்பன், ராஜா, ராஜேந்திரன், ரத்தினம், குணசேகரன் மற்றும் ஏராளமான தமாகாவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.