செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈடுபட்டது.
செடியன் குளம் நடை பாதை, மேடு பள்ளமாக இருப்பதால் இந்த சாலை வழியே கடந்து செல்லும் வாகனங்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக மழை காலங்களில் வழுக்கி கீழே விழுந்து அடிபட்டு எழுந்துசெல்லும் நிலை இருந்து வந்தது.
24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டத்துடன் இருந்து வரும் செடியன் குளம் பாதை, ஈசிஆர் சாலை - மேலத்தெரு - சிஎம்பி லேன் ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கக்கூடிய பிரதான பகுதியாக இருந்து வருவதால், மூன்று பகுதிகளை இணைக்கும் விதத்தில் 'கிராம இணைப்பு சாலை' திட்டத்தின் கீழ் புதிய சாலை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மேலத்தெருவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து வழங்கும் நிதி உதவியுடன் செடியன் குளம் நடை பாதையை புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' மு.மு கமருதீன் அவர்களின் மேற்பார்வையில் கடந்த இரண்டு நாட்களாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பாதை வழியே வாகனங்கள் இலகுவாக கடந்து செல்லவும், வயோதிகர்கள், மாணவர்கள் எவ்வித சிரமமின்றி நடந்து செல்லவும் குளக்கரையின் நடை பாதை மணலால் உயர்த்தி அகலப்படுதப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஜேசிபி இயந்திரம், டிராக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அதிரை ஏ ஜே நகரில் காலங்காலமாக சாக்கடை நீர் வடியாமல் கொசுத்தொல்லையால் பல அவலங்களை கண்டு வருகிறொம். அதிரை நியூஸ் நேரில் வந்து ஆய்வு செய்து பேரூராட்சிக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் சார்பாக கஎட்டுக்கொல்கிறென்
ReplyDeleteYaan
ReplyDelete