புனிதமிகு ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கோரி சமூக ஆர்வலர் கே.எம்.ஏ. ஜமால் முஹம்மது அவர்கள் அதிராம்பட்டினம் மின்சார வாரிய உதவி செயற்பொறியியாளர் திரு. பிரகாஷ் அவர்களை கடந்த 13-06-2016 அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் ரமழான் மாதம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏற்படும் மின்தடையை தவிர்க்கவும், அதிரை மின்சார வாரிய அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பி இந்த மாதம் நடைபெறும் மின்தடையை தவிர்க்க கேட்டுக்கொண்டார். இவரது முழு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த மாதம் ( ஜூன் ) நடைபெற இருந்த மின்சார பராமரிப்பு பணி அடுத்த ( ஜூலை ) மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது நம்மிடம் கூறுகையில்...
இந்த மாதம் 29/06/2016-புதன் கிழமை வழக்கம்போல் அதிரை பகுதியில் தமிழக மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்புக்காக மின்சாரத்தை துண்டிக்க ஆயத்தோடு இருந்தது தமிழக மின்சார வாரியம்.
இந்த விஷயம் எங்களுக்கு 13/06/2016-திங்கள் அன்று நோன்பு காலங்களில் தடையில்லாத மின்சாரம் வேண்டும் என்ற கோரிக்கையை அதிரை மின்வாரிய துணை பொறியாளர் திரு பிரகாஷ் அவர்களை சந்தித்து கொடுத்த போது தெரிய வந்தது. உடனே, தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, பின்பு அவர்களுக்கு கோரிக்கை கடிதங்களும் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில், நமது கோரிக்கையை ஏற்று இம்மாதம் நாளை 29/06/2016-புதன் கிழமை நடக்க இருந்த மாதாந்திர மின் பராமரிப்பு அடுத்தமாதம் “ஜூலை” இறுதி வரை ஒத்திவைப்பட்டது.
நமது கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கை எடுத்த தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு அதிரை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இந்தக் கோரிக்கையின் மூலம், அதிரை நகருக்கு மட்டும் இல்லை, மதுக்கூர் வாடியக்காடு துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பல ஊர்களுக்கு இன்று 29/06/2016 புதன் கிழமை மின் தடை இல்லை. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பேட்டையும் அடங்கும்.
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ். .. நல்ல விஷயம்
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ். .. நல்ல விஷயம்
ReplyDelete