அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் திமுக தலைவர் டாக்டர் கலைஞரின் 93 வது பிறந்த நாள் விழா நேற்று காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை கலந்துகொண்டார். அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆதரவாளர்கள், திமுகவினர் தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணி ஊர்வலம் புறப்பட்டனர். ஊர்வல முடிவில் அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள திமுக கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினர்.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆதரவாளர்கள், திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நம் உயிரினும் மேலான உலக தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களோட பிறந்த நாளை கொண்டாடினாலே நாம் எதிர்க்கிறோம்
ReplyDeleteஆனால் இங்கே எவனோ ஒரு இஸ்லாமிய துரோகியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் இதற்கு எல்லாம் மறுமையில் கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்
மேலே நான் இட்ட பின்னூட்டத்திற்கு சொம்பு தூக்கி கொண்டு வருபவர்கள் யாரா இருந்தாலும் நாளை மறுமையில் நீங்களும் சாட்சியாக இருப்பீர்கள் என்று மறந்து விட வேண்டாம்
ReplyDelete👍👌👏super boss
ReplyDelete