.

Pages

Tuesday, July 26, 2016

கல்வி உதவித்தொகை ( 1ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ) விண்ணப்பிப்பவர்களின் கவனத்திற்கு !

தமிழ்நாட்ழல் உள்ள அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர். இஸ்லாமியர். சீக்கியர். புத்தமதத்தினர். பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை (Pre Matric Scholarship) திட்டத்தின்கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற மாணவ-மாணவியரின் பெற்றொர்-பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ 1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ-மாணவியர் முந்தைய கல்வி ஆண்ழன் இறுதித் தேர்வில் (1ம் வகுப்பபு நீங்கலாக) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டொர் நலத்துறை. ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மோலம் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது. ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் புதியது ( Fresh ) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் தவிர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து  அப்லோட் (Upload) செய்திட வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையத்தில்  31-8-2016க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மாணவ-மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31-8-2016க்குள் பார்வேர்டு (Forward) செய்ய வேண்டும். மேலும் தகுதியயுள்ள மாணவ-மாணவியரின் பெயர் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மெற்பழ கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.