.

Pages

Monday, July 18, 2016

முத்துப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவன் மாயம்! போலீசார் தேடி வருகிறனர் !

முத்துப்பேட்டை, ஜூலை-18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் செய்து உசேன் மகன் முஜிபுர்ரஹ்மான்(43) இவர் சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஐந்து மகன்கள் இவரது இரண்டாவது மகன் செய்யது அப்சல்(15), நாச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சென்ற மாதம் 21-ந்தேதி பள்ளிக்கு சென்ற செய்யது அப்சல் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் செய்யது அப்சல் கிடைக்கவில்லை. இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை முஜிபுர்ரஹ்மான் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வெர்ஜினியா வழக்கு பதிவு செய்து மாணவன் செய்யது அப்சல் வீட்டில் கோபித்துக்கொண்டு எங்கையாவது சென்றாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து தேடி வருகிறார்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.