தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கண்டியூர் கிராமம், பாத்திமா நகரில், 13.07.2016 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 57 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதடைந்ததால், பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை தலா ரூ.2000மும், உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை ஆகியவைகளை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
முன்னதாக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5000மும், 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டன. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பின்னர், கண்டியூரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 57 குடிசைப் பகுதிகளை மாண்புமிகு அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கிட பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை இழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றின் நகல் பெறுவதற்குரிய சான்றுகள் வருவாய்த்துறை மூலம் விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி, திரு.எம்.ஜி.எம். சுப்பிரமணியன், திரு.ரெத்தினசாமி, வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.மோகன், ஒன்றியத் தலைவர் திரு.கோபிநாத், ஒன்றியத் துணைத் தலைவர் திரு.இளங்கோவன், பேரூராட்சித் தலைவர்கள் திரு. செந்தில்மணி, திரு.தவக்கல்பாட்சா, திரு.கருணாநிதி, திரு.நீலமேகம், கண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சாலீக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.