அதிராம்பட்டினம், ஜூலை 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தாஜுதீன் ( வயது 30 ). கடந்த 11 ஆண்டுகளாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது கடை ஷட்டரின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த திருடர்கள் அங்குள்ள விலை உயர்ந்த செல்போன், டேப் லட், செல்போன் உதிரிபாகங்கள் ஆகியவற்றை திருடிக்கொண்டிருக்கும் போது அப்பகுதி வழியே சென்ற அதிராம்பட்டினத்தை சேர்ந்த சகாபுதீன் என்பவருக்கு சப்தம் கேட்டுள்ளது. உடனே 'திருடன்', 'திருடன்' என கூச்சல் போட்டுள்ளார். பின்னர் அலறல் சத்தத்தைக் கேட்டுவிட்டு திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 4 பேர் கொண்ட திருட்டு கும்பல் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கடையின் அடுத்தடுத்துள்ள கடைகளிலும் திருடும் முயற்சியில் ஈடுப்பட்டு அவை தோல்வியில் முடிந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து செல்போன் கடை உரிமையாளர் தாஜுதீன் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கடையின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் திருடர்களின்
உருவங்கள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோக் காட்சியை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அதிராம்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அதிராம்பட்டினம் வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் தொடர் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், திருட்டை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் முன்வர வேண்டும் என்றும், இரவில் அதிராம்பட்டினம் குடியிருப்பு மற்றும் பிரதான சாலை பகுதிகளில் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும் என்றும், மேலும் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் திருடர்களின் நடமாட்டத்தை அறிந்துகொள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.