.

Pages

Thursday, July 21, 2016

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்க மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் உடலியக்க குறைபாடுடையோர் மற்றும் காது கேளாத வாய் பேசாத இயலாததோர் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்குவதற்கான  நேர்காணல் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தையல் பயிற்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதுடைய உடலியக்க குறைபாடுடையோர் மற்றும் காது கேளாத வாய் பேசாத இயலாததோர்களுக்கு 2015-16ம் ஆண்டு நிதியாண்டிற்கான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடைபெற்றது.  விண்ணப்பத்திருந்த 80 மாற்றுத்திறனாளிகள் நேர்காணல் முகாமிற்கு கலந்து கொண்டனர்.  இவர்களில் தகுதியுடைய 60 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. நேர்காணலினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் திருமதி.பாக்கியலெட்சுமி, தையல் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.