பட்டுக்கோட்டை காவல் துணைக் கோட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் திருடுப் போன 70 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பட்டுக்கோட்டை பகுதியில் அண்மைக்காலமாக நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன. நகை திருடர்களைப் பிடிக்க பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் மதன்ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கொண்டிக்குளம் கிராமத்தில் நின்ற 5 பேரை தனிப்படை போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பட்டுக்கோட்டை அண்ணாநகர் க. ராஜேந்திரன் (56), அவர் மகன் மணிகண்டன் (26), இவர்களின் உறவினர்கள் கொண்டிக்குளம் சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்த மு. மூர்த்தி (28), கா. முருகன் (24), சிவகங்கை மஜீத் தெருவைச் சேர்ந்த சு. பிரபாகரன் (25) என்பதும், இவர்கள்தான் கடந்த சில மாதங்களாக பட்டுக்கோட்டை நகரில் 6 இடத்திலும், பட்டுக்கோட்டை தாலுகா பகுதியில் 5 இடத்திலும், திருச்சிற்றம்பலம் பகுதியில் 4 இடத்திலும், சேதுபாவாசத்திரம் பகுதியில் 5 இடத்திலும், பேராவூரணியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 21 இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து 70 பவுன் நகைகளைத் திருடியது தெரியவந்தது.
போலீஸார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 70 பவுன் நகைகளை மீட்டனர்.
நன்றி: தினமணி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.