.

Pages

Sunday, July 24, 2016

'அல்லாஹ்' மீது வினோத அச்சம்! முஸ்லீம்கள் விமான பயணங்களில் சந்திக்கும் பிரச்சனைகள்

அல்லாஹ்வின் நிகரற்ற ஆற்றலை அறிந்துள்ள மனிதர்களாகிய நாம் மீது அச்சம் கொள்ள வேண்டும் என்பது சரிதான் ஆனால் அல்லாஹ் என்ற எழுத்தை பார்த்து யாராவது அச்சம் கொள்வார்களா?

யூத, கிருஸ்தவர்களால் நடத்தப்படும் மேற்கத்திய ஊடகங்கள் முஸ்லீம்கள் மீது ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத தோற்றம் மேற்கத்திய நாட்டு மக்களை அர்த்தமில்லாமல் கனவிலும் அலற விடுகின்றன, குறிப்பாக விமானப் பயணங்களில் இவை தொடர்கதையாகி வருகின்றன.

குற்றம் குற்றமே அவற்றை யார் செய்தாலும் ஆனால் மேற்கத்திய வல்லரசுகளும் அவற்றின் அடிவருடி நாடுகளும் முஸ்லீம்கள் மீது இழைக்கும் வன்முறைகளை, படுகொலைகளை பத்தி செய்தியாக கூட கொண்டு வராதவர்கள் சில இஸ்லாமிய பெயர்தாங்கி மூடர்கள் செய்யும் அட்டுழியங்களை மட்டும் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு குறைந்துவிடாதவாறு பக்கம் பக்கமாக எழுதுகின்றன, காட்சி ஊடகங்களில் கற்பனைகளுடன் ஒப்பாரி வைக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த வினோத அச்சத்தையும் விவேக நடவடிக்கையையும் பார்ப்போம்.

ஜிவா அக்பர் என்ற பிரிட்டனை சேர்ந்த முஸ்லீம் இளம்பெண் கிரேட்டர் மான்செஸ்டரிலிருந்து ஸ்பெயினுக்கு செல்லும் விமானத்தில் அமர்கிறார், அவருக்கு அருகே ஒரு தாய் தனது 11 வயது குழந்தையுடன் இருந்தவர் திடீரென படபடப்புடன் வேர்த்து விறுவிறுத்தவராக, முகம் இருண்ட நிலையில் இருக்கையிலிருந்து படாரென்று எழுந்து சென்று விமானப் பணிப்பெண்களிடம் முறையிடுகிறார். ஜிவா அக்பர் அவருடைய நடவடிக்கையால் குழம்பி உடல்நிலை சரியில்லையோ என எண்ணுகிறார் ஆனால் அங்கிருந்து கிடைத்ததோ இதயத்தை நிறுத்திவிடும் பதில், அது ஜிவா அக்பர் தன்னுடைய மொபைலில் 'அல்லாஹ்' என்று டைப் செய்வதை பார்த்தேன் என்பது தான் அவரது வினோத அச்சத்திற்கு காரணமாம்.

ஓரு வழியாக விமானப்பணிப் பெண்களும், ஜிவா அக்பரும் அந்தப் பெண்ணை 15 நிமிடப் போராட்டதிற்குப்பின் சமாதானப்படுத்தினர். மேலும், ஜிவா அக்பர் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு 'அல்லாஹ்' என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லீம்கள் யார் என்பதெல்லாம் குறித்து பொறுமையாக, விவேகத்துடன் தனது பயண நேரத்தில் அழகிய முறையில் எடுத்துச் சொல்ல, அது உலக விஷயங்கள் பலவற்றையும் பகிர்ந்த கொள்ளும் அளவுக்கு மிக நெருக்கமாக, இன்று அச்சம் அகன்ற அந்தப் பெண்ணும் ஜிவா அக்பரும் நண்பர்களாக தொடர்கிறார்கள்.

ஒரு சில விமானப் பணிப்பெண்களைப் போல் தன்னை விமானத்திலிருந்து வெளியேற்றி விடாமல் நேர்மையாக நடந்து கொண்ட அவர்களை குறித்து நன்றியுடன் சிலாகிக்க, முகநூல் பதிவு பல்லாயிரக்கணக்கோரால் பகிரப்பட்டும் விரும்பப்பட்டும் வருகிறது.

இவை இப்படி இருக்க, அமெரிக்காவில் முஹமது அஹமது ரதுவான் என்ற முஸ்லீம் சகோதரர் ஒருவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணால் அநியாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

வடக்கு கரோலினா, சர்லோட் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண் திடீரென மைக்கில் ரிதுவானுடைய பெயர், சீட் நம்பர் என அனைத்தையும் அறிவித்து 'உன்னை நான் கண்காணித்துக் கொண்டுள்ளேன்' என அறிவித்துள்ளார்.

ரிதுவான் இந்த அறிவிப்பு குறித்து வேறு இரு விமானப் பணியாளர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்ல அவர்களும் நீங்கள் இதில் பயணிப்பதை 'மிகுந்த சங்கடமாக உணர்கிறோம்' என வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இப்படிப் பல அமெரிக்க விமானப் பணியாளர்கள் மனநோய் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதை கடந்த ஏப்ரல் மாதம் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவமும் தெளிபடுத்துகிறது.

ஹக்கீமா அப்துல்லா என்ற சோமாலிய வம்சாவழிப் பெண் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் எனும் அமெரிக்கா விமானத்தில் சிகாகோ நகரிலிருந்து சியாட்டில் நகருக்கு செல்வதற்காக வந்தவர் தனது முன்னிறுக்கையை நேரக்கும்படி வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, வேறு எத்தகைய காரணமுன்றி விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். இதுகுறித்து விமான நிறுவனம் 'பாதுகாப்பு காரணம்' என்ற விளக்கெண்ணை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் இதே சிகாகோ விமான நிலையத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்திலிருந்தும் 3 குழந்தைகளுடன் ஒரு தம்பதியர் பாதுகாப்பு காரணங்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டதாகவும், அதிகரித்து வரும் இத்தகைய இனவெறுப்பு சம்பங்கள் குறித்து அமெரிக்க - இஸ்லாமியர்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்காக அமைப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் தெரிவித்துள்ளது.

Source: The Independent
தமிழில் விமர்சனங்களுடன்
நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.