.

Pages

Sunday, July 17, 2016

புத்தக திருவிழாவில் நடைபெற்ற வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசளிப்பு !

தஞ்சாவூரில் அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழாவில்
நடைபெற்ற வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் பரிசுகளை வழங்கினார்.

இன்று (17.07.2016) புத்தக திருவிழாவில் டாக்டர் சங்கரநாராயணன் அவர்கள் அரங்கினுள் வந்திருந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தினார்கள்.  வினாடி வினாவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

மேலும், கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் சோம.வீரப்பன் அவர்களும் கருத்துரை வழங்கினார். நூளை (18.07.2016) கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் படித்தாலே ஆனந்தம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.   தினமும் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பேச்சாளர்களைக் கொண்டு கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

புத்தக கண்காட்சியில் 120 மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்று உள்ளது.  புத்தக திருவிழாவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.