குவைத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உலகளவில் அங்கு அதிகபட்சமாக 129.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. வளைகுடா நாடுகளில் எப்போதுமே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இந்த முறை வழக்கத்துக்கும் அதிகமாக குவைத் நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
உலக வரலாற்றிலேயே கடந்த வியாழக்கிழமை, குவைத்தில் உள்ள மித்ரிபா பகுதியில் 54 டிகிரி செல்சியஸ் (129.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. வெயிலின் கோர தாக்குதலால், குவைத் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 1913ம் ஆண்டு ஜூலை 10ல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 56.7 டிகிரி செல்சியசாக (134.06 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகி இருந்தது. ஆனால் இந்த பதிவின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால், இப்போது குவைத்தில் பதிவாகி உள்ள வெப்பநிலை, உலகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.