.

Pages

Thursday, July 21, 2016

பட்டுக்கோட்டையில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47). மத போதகர். இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார்.

இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர். இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது.

இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர்.

போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை புதன்கிழமை இரவு கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.