.

Pages

Tuesday, July 19, 2016

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்படுவாரா ?

அதிராம்பட்டினம், ஜூலை 19
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால், பணிகள் தேக்கமடைந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 21 வார்டுகள் உள்ளது. தினசரி பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.

ஆனால், கடந்த பல மாதங்களாகவே நிரந்தர செயல் அலுவலர் நியமனம் செய்யப்படாததால் மதுக்கூர், பெருமகளூர் உள்ளிட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

அவர்களுக்குள்ள பணிச்சுமை காரணமாக, அதிராம்பட்டினம் அலுவலகத்துக்கு அவர்கள் வருவதில்லை. இதனால், சான்றிதழ்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தற்போது மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலரே இங்கு பொறுப்பில் உள்ளார். சுமார் 15 கி.மீ. தொலைவு பயணம் செய்து, வந்து போவதற்குள் அலுவலக நேரம் முடிந்து விடுகிறது. அதுவும் வாரத்திற்கு ஓரிருமுறை அலுவலகத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிரந்தர செயல் அலுவலரை நியமனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.