.

Pages

Sunday, July 24, 2016

அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்திய இலவச பொது மருத்துவ முகாமில் பலர் பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஜூலை 09
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொதுநல மருத்துவ முகாம் இன்று காலை அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மஹாலில் நடைபெற்றது.

முகாமிற்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் எம். வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. சந்திரசேகர், பொருலாளர் டி. முஹம்மது நவாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் மெட்ரோ மாலிக் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவ குழுவினர் மருத்தவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். இதில் உடல் எடை பரிசோதனை, உடல் இரத்த அழுத்தம், இ.சி.ஜி பரிசோதனை, இரத்தத்தின் சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. மேலும் இருதயம் மற்றும் சக்கரை நோய் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டன.முகாமில் 140 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் 30 பேர் உயர் சிகிச்சை வழங்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்

இந்த முகாமில் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உதயகுமார், வைரவன், முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன், கண்ணன், ராமு உட்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.