படித்த பட்டதாரி இளைஞர்கள் நேர்முகத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற நேர்முகத்தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாணவர் இந்தியா அமைப்பு அதிரை கிளை சார்பில் இன்று இரவு அதிராம்பட்டினம், நடுத்தெரு பைத்துல்மால் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் செயலாளர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி, நியாஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகம் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வரும் அப்துல் ஹாதி MBA, M.Com., (ACCA) அவர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பட்டதாரி இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து உரை நிகழ்த்தினார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பின் நேர்முகத்தேர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா வரவேற்றார். முடிவில் மாணவர் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் செயலாளர் நூர் முஹம்மது நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி வணிகவியல், வணிக ஆட்சியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் குறிப்பேடுகள், பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் கிளை பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.
இதே போல் நிறைய முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆக்கபூர்வமான முயற்சி பாராட்டுக்கள்.
ReplyDelete