.

Pages

Wednesday, July 20, 2016

துபாயில் 75 மாடி கட்டடத்தில் தீ விபத்து ! [ படங்கள் ]

துபாயில் மெரீனா என்ற பகுதியில் சுலாஃபா என்ற அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 75 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளன.

இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் 35-வது மாடியில் இருந்து ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. மூன்று மணி நேரமாக தீ பற்றி எரிவதாக கூறப்படுகிறது. உடனடியாக கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

கட்டடம் தீப்பிடிக்கும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.